’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக நாட்டில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை மாயாஜால விதைகளை செய்து மாற்றிவிட முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து தமிழ்மிரருக்குக் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அம்பிகா சட்குணநாதன், மனித உரிமை நிலவரங்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் தனிமனிதரில் தங்கியிருப்பதில்லை. புதிய ஒருவர் பதவிக்கு வருவதால் மாத்திரம் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாது என்றார்.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக மாயாஜால விதைகளை செய்து மனித உரிமைகள் செயற்பாடுகளில் அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கூட பொலிஸ் வன்முறைகள் குறைந்திருந்த போதிலும் முற்றாக இல்லாமல்போகவில்லை. மனித உரிமைகள் தொடர்பான நிலவரங்கள் எனும்போது அது தனி மனிதரில் தங்கியிருப்பதில்லை. ஒட்டுமொத்த மக்களின் மனநிலையில் மாற்றங்கள் வர வேண்டம். குறிப்பாக பொறிமுறையில் மாற்றம் ஒன்றே நாட்டுக்கு அவசியம் எனவும் தெரிவித்தார்.
இம்மாதம் 9ஆம் திகதி அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. மாறாக அரசியல்வாதிகளின் வீடுகளைத் தாக்கியதாகவும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் பலரை பொலிஸார் கைது செய்துவருகிறார்கள்.நியாயமான சந்தேகத்தின் அடிப்படையிலோ அல்லது ஆதாரத்தின் அடிப்படையிலோ இந்த கைதுகள் இடம்பெறவில்லை என்பதுபோலவே எமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிப்பதாகவும் கூறினார்.
ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது!!
சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை ஸ்தாபிக்க கலந்துரையாடல் – பிரதமர் ரணில்!! (படங்கள்)
மேலே ரணில் கீழே பசில் – நெருக்கடி மேலும் மோசமாகும்! (வீடியோ)
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 2.18 பில்லியன்!! (வீடியோ)