’எந்தப்பக்கமென எனக்கே தெரியாது’ !!
எதிர்க்கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களுக்கு அமைச்சுப் பதவிகள் வேண்டுமென தன்னிடம் கோரிக்கை விருத்திருந்தாத சபையில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கூச்சல் குழப்பத்தில் ஈடுபடும் பாராளுமன்றக் கலாசாரம் நீடித்தால், அடுத்த வாரம் பாராளுமன்றமும் இல்லாதுபோகுமெனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றும் போதே அவர் இதனை கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தொடர்ந்து பேசப்படுகிறது, இது தொடர்பில் பொலிஸார் எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென நான் பொலிஸ்மா அதிபரிடம் வினவியபோது, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரைக் கைது செய்ய வேண்டுமென சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ்மா அதிபர் கூறினார் என்றார்.
மேலும் இந்த விசாரணைகள் தொடர்பில் மூன்று நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது இரு நாட்களுக்கு ஒருமுறையோ அறிக்கையிட வேண்டுமென பொலிஸ்மா அதிபருக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார். பாராளுமன்றத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு எதிராகப் பேசிவந்த குமார் வெல்கம எம்.பி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது வெறுமனே நடந்த ஒன்றல்ல என எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன நான் தனிக் கட்சி பிரதமராக இருப்பதாகவே கூறுகின்றனர். ஆளும் கட்சி கூட்டத்திலோ எதிர்க்கட்சி கூட்டத்திலோ நான் கலந்துகொள்ளவில்லை. இன்னும் நான் பாலத்தில் எந்தப் பக்கத்தில் இருக்கின்றேன் என்றும் தெரியாதே இருக்கின்றேன் என்றார்.
அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!
போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!
’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!
ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது!!