ரணிலை முழுமையாக ஆதரிப்போம்: ஜீவன் !!
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழு ஒத்துழைப்பையும் வழங்குமென சபையில் தெரிவித்த இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், இடைக்கால அரசாங்கத்தில் தான் எடுக்கப்போகும் அமைச்சு ஒட்டுமொத்த மலையகக் கட்சிகளுக்குமானதெனவும் தெரிவித்தார்.
காலிமுகத்திடல் சம்பவம் மற்றும் அதனை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று(17) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்களுக்குப் பிரதமர் ஆற்றிய உரையை தான் வரவேற்பதாகவும், இந்த உரையில் பிரதமர் நாட்டின் நிலைமைகள் தொடர்பில் எந்தவிதமான பொய்யையும் கூறவில்லை. நாட்டுக்கு கட்டாயமாக ஒரு தலைமைத்துவம் வேண்டும். அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதன் ஊடாகவே பொருளாதார நெருக்கடி தீர்வு காண முடியும் என்றார். மேலும் இவ்வாறான நெருக்கடி நிலமைகளில் பிரதமர் பதவியை ஏற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இ.தொ.கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
மக்களின் கருத்துக்களையே நாம் பாராளுமன்றத்தில் பிரதிபளிக்கிறோம். இதன்படியே சுமந்திரன் கொண்டுவந்த பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு நான் ஆதரவாக வாக்களித்திருந்தேன். எனினும் எங்களுடைய மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் இதனை எதிர்த்து வாக்களித்துள்ளார். இது தொடர்பில் அவர் விளக்கமளிப்பார் என்றார்.
கஸ்டக்காலத்தில் உதவும் எதிரியை நம்பலாம். ஆனால் நீங்கள் நாசமாக வேண்டுமென நினைக்கும் நண்பனை நம்பக்கூடாது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆரவளிப்பதால் எங்களை பலரும் விமர்சிக்கிறார்கள். இந்த நெருக்கடி நிலைமையில் ரணில் இல்லை எனக்கு முன்பாக இருக்கும் வேலுகுமார் எம்.பி பிரதமரானாலும் நாம் அவரை ஆதரிப்போம் எனவும் தெரிவித்தார்.
அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!
போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!
’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!
ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது!!