ஓய்வு நிலை கல்விப்பணிப்பாளர் கோ.சி.வேலாயுதம் காலமானார் !!
காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் முதலாம் குறுக்குத் தெரு யாழ்ப்பானத்தை வசிப்பிடமாகவும் கொண்டு தற்போது லண்டனில் வசித்துவந்த சைவப்புலவர் பண்டிதர் செஞ்சொற்கொண்டல் கோசி. வேலாயுதம் லண்டனில் 18.05..2022 இன்று காலமானார்.
முன்னாள் வடக்குகிழக்கு மாகாண யாழ்பிராந்திய கல்விப்பணிப்பாளராகவும் வலம்புரி பத்திரிகையின் உருவாக்குனரும் முன்னாள் பிரதம ஆசிரியரும் யாழ்தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியராகவும் யாழ்மாவட்ட சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவின் முன்னாள் உபதலைவராகவும் தெல்லிப்பழை கலைஇலக்கியக் கழகத்தின் முன்னாள் உபதலைவரும் தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் முன்னாள் தலைவராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் பேரவை உறுப்பினராகவும் வடஇலங்கை சங்கீத சபை முன்னாள் தலைவராகவும் தமிழர் விடுதலைக்கூட்டனி தமிரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராக தந்தை செல்வா காலம் முதல் பணியாற்றியுள்ளார்
நாடறிந்த பேச்சாளராகவும் இலக்கிய கர்த்தாவாகவும் கணித விற்பன்னராகவும் சோதிட விற்பன்னராகவும் திகழ்ந்தவர்
லண்டன் விஞ்ஞானமானி பட்டத்தினையும் தமிழ்நாடு சென்னை சித்தாந்த சமாஜத்தில் சைவப்புலவர் பட்டத்தையும் மதுரை தமிழ்சங்க பண்டிதர் பட்டத்தையும் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றினையும் பெற்றுக் கொண்டவர்
நில அளவையாளராக கணித விஞ்ஞான ஆசிரியராக ஆசிரிய ஆலோசகராக அதிபராக கொத்தனி அதிபராக கோட்டக்கல்விப்பணிப்பாளராக யாழ் பிராந்திய கல்விப்பணிப்பாளராக பணி ஓய்வு பெற்றவர்
ஈழத்து இலக்கியப்பரப்பின் இலக்கிய ஆளுமை பேச்சாளன் நல்லாசான் கல்வியதிகாரி பத்திரிகையாசிரியர் நூலாசிரியர் சமய விற்பன்னர் சோதிடர் என பல்திறன் கொண்ட ஆளுமையை இழந்து தவிக்கின்றோம்
ஆளுமையாளனின் இழப்பு எம்மை ஆழ்துயரில் ஆக்கியுள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”