அரசாங்கத்துக்கு GMOA விடுத்துள்ள எச்சரிக்கை !!
2022 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.
இன்றையதினம் (18) குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தொழிற்சங்கப் போராட்டம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார சேவைகளை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரதமர், பிரதமர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ள சங்கம், பிரச்சினைகளை தீர்க்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் சாதகமான பதிலை வழங்கத் தவறினால் மே 25ஆம் திகதி சுகாதாரத் துறையின் ஏனைய ஊழியர்களுடன் இணைந்து தமது தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சங்கம் எச்சரித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளியான உண்மை (வீடியோ)
கட்சி மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த அனுரகுமார!! (வீடியோ)
அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!
போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!
’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!
ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!