இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்கவும்: கெய்ர்!!
இழந்தவர்களை நினைவுகூரும் போது இது நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தை நினைவூட்டுவதாக இருக்கவேண்டும். இந்த கொடுமைகளைச் செய்த குற்றவாளிகள் 13 ஆண்டுகளாகியும் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை எனவும் இன்று இத்தகைய பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கு உள்ளானவாகள் மற்றும் அதில் உயிர்பிழைத்தவாகளின் குடும்பங்களிற்கு நீதி கிடைக்க தொழிற்கட்சி மீண்டும் உறுதியளிப்பதுடன் பிரித்தானிய அரசாங்கம் தமிழ்ச் சமூகத்துடன் நிற்கவேண்டுமெனவும், மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளிற்கு செவிசாய்க்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம் எனவும் பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவரும் மகாராணியின் சட்டத்தரணியும் முன்னார் அரச தரப்பு சட்டத்தரணியுமான, கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியா அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்.
இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ மக்களை நினைவு கூருவதாகவும் தாம் இந்த நாளை நிதானமாக சிந்திக்கம் போது தங்கள் எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களை நோக்கியே உள்ளதெனவும் தொழிற்கட்சி தமிழ் சமூகத்தினுடன் இணைந்து நின்று தொடர்ந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.