இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – பிரதமர்!!
எதிர்வரும் காலங்களில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதோடு, நாளாந்தம் உணவைப் பெற்றுக்கொள்வதற்கு பெரும் நெருக்கடி ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், உலகத்தில் ஏற்படவுள்ள பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகி வருவதாக அமெரிக்காவின் நிதியமைச்சர் ஜனட் எலன் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், உலகின் பல நாடுகளில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாகவும் அதில் இலங்கையும் உள்ளடங்குவதாக தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளில் உணவு கிடைக்காமல் போவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
எனவே, உணவுத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, ஜூன் நடுப்பகுதி வரை எரிபொருள் இருப்பதாகவும், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த இதர அரச பணியாளர்கள் சேவைக்கு வருவது தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளியான உண்மை (வீடியோ)
கட்சி மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த அனுரகுமார!! (வீடியோ)
அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!
போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!
’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!
ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!