கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)
கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் 2021 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது
தேசிய ரீதியில் தமிழ் மொழியில் முதலாம் இடத்தினை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவர் பெற்றிருந்த நிலையில் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் 2022 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துகொண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி வைத்தார்
கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் யாழ்ப்பாண கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
நிகழ்வின் ஆரம்பத்தில் மேள வாத்தியங்களுடன் விருந்தினர்கள் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டு தேசியக்கொடி பாடசாலைக் கொடி ஏற்றப்பட்டு மங்கள விளக்கு ஏற்றி நிகழ்வுகள் ஆரம்பமாகியதோடு பாடசாலை மாணவர்களின் கலை நகழ்வுகளும் இடம்பெற்றது
நிகழ்வின் இறுதியில் வடக்குமாகாண ஆளுநர் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் நினைவு பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”