’கோட்டாப ராஜபக்ஷவின் கீழ் அரசை உருவாக்க தயாரில்லை’ !!
கோட்டாப ராஜபக்ஷ அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது. இதனால், சர்வதேச உதவிகள் கிடைக்காது. அதனால் தான் கோட்டாப ராஜபக்ஷவின் கீழ் அரசாங்கத்தை உருவாக்க நாம் தயாரில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் .
எமது நாடு இன்று முற்றாக சீரழிந்து விட்டது. இதனை நினைத்து நாம் மிகுந்த வேதனையடைகிறோம். இரண்டு தரப்பினரும் இதற்காக வெட்கப்பட வேண்டும். ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷவின் தவறான தீர்மானங்களே இதற்கெல்லாம் காரணம். கோட்டாபவே இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்.
புதிய அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க நாம் தயார். ஆனால் இன்று அமைந்துள்ளது புதிய அரசாங்கமல்ல. எனவே, நாட்டையே சீர்குலைத்த அரசாங்கத்துக்கு என்ன தண்டனை வழங்குவது ? இந்த ஆட்சியாளர்கள் இல்லாத புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டால் மட்டுமே நாட்டை மீட்டெடுக்க முடியும். அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும் என்றார்.
20 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தபோது எதிர்க்கட்சிகளிடம் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை. ஜனாதிபதியின் கடந்த கால வழக்குகளுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளினாலேயே இது கொண்டுவரப்பட்டது. நாம் இதன் ஒரு சரத்தைக்கூட காணவில்லை.
இதற்கு சபாநாயகரும் பொறுப்புக்கூறவேண்டும். யாரும் பாராளுமன்றத்தில் இல்லாத நேரம் பார்த்து, நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, திருட்டுத்தனமாக இதனை கொண்டுவந்தீர்கள். அலி சப்ரி போன்ற சிரேஷ்ட சட்டத்தரணி இவ்வாறானதொரு திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தமையிட்டு நாம் வெட்கமடைகிறோம் எனக் குறிப்பிட்டார்.
IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளியான உண்மை (வீடியோ)
கட்சி மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த அனுரகுமார!! (வீடியோ)
அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!
போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!
’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!
ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!