தொழிலாளர் காங்கிரஸ் இந்தியாவிடம் விடுத்துள்ள கோரிக்கை !!
இலங்கையின் பொருளாதார நெருக்கடியினை தீர்ப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொருப்பாளர் பாரத் அருள்சாமி ஆகியோர் இந்திய நிதி அமைச்சர் நிர்லமா சீத்தாராமளை நேரில் சந்தித்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கும் இதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது நன்றிகளை தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் பொருளாதாரம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வருவதாக இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுளள்து.