ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து கருத்து: டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கைது- காங்கிரஸ் கண்டனம்..!!
டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான இந்து கல்லூரியின் வரலாறு பேராசிரியராக இருப்பவர் ரத்தன்லால். இவர் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்று இருக்கிறார்.
வாரணாசியில் உள்ள சியான்வாபி மசூதி விவகாரம் தொடர்பாக பேராசிரியர் ரத்தன்லால் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்தார். சிவலிங்கம் குறித்து கேள்வி எழுப்பி அவர் சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டார்.
டெல்லியை சேர்ந்த வக்கீல் வினித்ஜினடால் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் ரத்தன்லால் சிவலிங்கம் குறித்து டுவிட்டரில் அவதூறாக சித்தரித்து உள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தார். இதை தொடர்ந்து வடக்கு டெல்லி சைபர் கிரைம் போலீசார் டெல்லி பேராசிரியர் ரத்தன்லாலை கைது செய்தனர்.
அவரது கருத்து மதத்தின் அடிப்படையில் இருவேறு குழுக்கள் இடையே விரோதத்தை ஊக்குவிக்கும் வகையில் இருந்ததாக கூறி இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகள் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முன்னதாக ரத்தன்லால் தனது பதிவு வைரலான நிலையில் எனக்கு நிறைய ஆன்லைன் மிரட்டல் வருகின்றன என்று பதிவிட்டு இருந்தார்.
இது தொடர்பாக ரத்தன்லால் நிருபர்களிடம் கூறியதாவது-
நான் எனது பதிவுக்கா இத்தனை மிரட்டல்கள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் எனது பதவில் விமர்சனம் கூட செய்யவில்லை. ஒரு பார்வைதான் பதிவிட்டு இருந்தேன். நான் நம் நாட்டில் மட்டும் தான் எதற்கெடுத்தாலும் மக்களின் மத உணர்வு புண்படுகிறது. அப்படி என்னால் என்ன செய்வது. வாயில் பேண்டேஜ் தான் போட்டுக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. நான் ஒரு வரலாற்று ஆசாரியர் ஆவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரத்தன்லால் கைதுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது பேராசிரியர் ரத்தன்லால் கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்கிறேன். அரசியல் சட்டப்படி அவருக்கு கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது என்றார்.