;
Athirady Tamil News

ரணிலிடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை !!

0

உணவு இல்லை. காஸ் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான் என தெரிவிக்கு கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று வந்த குடும்பங்கள், ஒருவேளை உணவுமின்றியும், உணவு சமைக்க வழியுன்றியும் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, வடகொழும்பின் பின்தங்கிய நகர தோட்ட குடியிருப்புகளில் வாழ்ந்த மக்கள், எமது ஆட்சிகாலத்தில் சுமார் 13,000 தொடர்மாடி இல்லங்களில் குடியமர்த்தப்பட்டார்கள். இந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கும், கொழுப்பு நகரின் பின்தங்கிய குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கும், பங்கீட்டு அட்டைகள் வழங்கி, அவர்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மனோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்காக, கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பாரிய சமையலறை மற்றும் கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான பயன்படுத்தபடாத சமையலறைகள் ஆகியவை பயன்படுத்தலாம். இராணுவ சமையல் பணியாளர்களை பணியில் அமர்த்தி இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை முன்னெடுங்கள் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமருக்கு நேரடியாக கடிதம் ஒன்றையும் மனோ கணேசன் அனுப்பி வைத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.