21ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக பெசிலுக்கு ஆப்பு?
21ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாளை (23) அமைச்சரவையில் சமர்ப்பித்து அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், உடனடியாக அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
21ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக இரட்டைக் குடியுரிமைக் கொண்டவர்கள் பாராளுமன்றத்துக்கு செல்வதற்கான வாய்ப்பு இல்லாதொழிக்கப்படும் எனவும், தற்போது பாராளுமன்றத்தில் உள்ள இரட்டைக் குடியுரிமைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பறிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமைக் கொண்ட இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர். 21ஆவது திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் பெசிலின் எம்.பிப் பதவி பறிப்போகும்.