கலவரம் தொடர்பில் இதுவரையில் 1,500 பேர் கைது!!
மே.9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதிலுள்ள பொலிஸ் நிலையங்கள், பிரிவுகளின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதுவரையிலும் 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர், அதில் 667 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.