எரிபொருள் தீர்ந்ததால் உரிமையாளரின் வீட்டுக்கு தீ !!
கெக்கிராவ IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தீர்ந்ததால் ஆத்திரமடைந்த மக்கள், குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருடைய வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.
இப்பலோகம – ரணஜயபுர, திலகபுர பகுதியில் உள்ள வீட்டுக்கு நேற்று இரவு தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
நேற்று, எரிபொருளை பெறுவதற்கு குறித்த இடத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடியது, இவர்களில் சிலருக்கே எரிபொருள் கிடைத்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் உரிமையாளரின் வீட்டைத் தீக்கிரையாக்கியுள்ளனர்.
வீடு தீப்பிடிக்கும் போது உரிமையாளரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வீட்டில் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அயலவர்கள், கிராம மக்கள் மற்றும் இப்பலோகம பொலிஸார் இணைந்து தீயை அணைத்து மக்களை காப்பாற்றியுள்ளனர்.
குறித்த இரு பாடசாலை மாணவர்களில் ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிலையில், அவர்களது வீடு மற்றும் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அனுராதபுரம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.