அலரிமாளிகைக்கு ’பாய்’ சொன்ன ரணில் !!
பிரதமர் அலுவலகத்தின் செலவுகளை 50 சதவீதத்தால் குறைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில், அது தனக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ள பிரதமர், அலரிமாளிகையில் வசிப்பதில்லை என தீர்மானித்துள்ளார்.
கொழும்பு பிளவர் வீதியில் உள்ள தனது தனிப்பட்ட இல்லத்தில் தங்கியிருந்து பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் கூட அலரிமாளிகையில் தங்கியிருக்கவில்லை எனவும், உத்தியோகபூர்வ தேவைகளுக்காக மாத்திரம் அலரிமாளிகையை பயன்படுத்தியதாகவும் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.