நாய்கள் துரத்தியதால் விபரீதம் – ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 6 வயது சிறுவன்..!!
பஞ்சாப் மாநிலம் கர்திவாலா பகுதி அருகே ரித்திக் என்கிற 6 வயது சிறுவன் வயல் வெளியில் விளைாயடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவனை வெறிப்பிடித்த நாய்கள் சில துரத்தியுள்ளது. இதனால் பயந்துப்போன சிறுவன் அங்கிருந்த ஓடியுள்ளான். அங்கு ஆழ்துளைக் கிணறி ஒன்று சாணல் பையால் மூடியிருப்பதை கவனிக்காமல் அதில் கால் வைத்து உள்ளே விழுந்தான்.
சுமார் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 100 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர் சிறுவனனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ” ஹோஷியார்பூரில், 6 வயது சிறுவன் ரித்திக் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான். சிறுவனை மீட்டுகும் பணி குறித்து நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.