ஆஸி பாராளுமன்றில் முதல் இலங்கை பெண் !!
அவுஸ்திரேலியாவின் 47ஆவது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான கூட்டாட்சித் தேர்தலில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கசாண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றுள்ளார் என்பதுடன், அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் இலங்கைப் பெண்மணி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி மெல்போர்னில் உள்ள ஹோல்ட் தொகுதியில் போட்டியிட்ட அவர், அதே தொகுதியில் போட்டியிட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு வேட்பாளரான ரஞ்ச் பெரேராவை தோற்கடித்து அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.
அவரது மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் கசாண்ட்ரா பெர்னாண்டோ முன்னிலை வகிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
1988 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த அவர், 1999 இல் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார் அவர், பேஸ்ட்ரி சமையற்காரராகப் பணியாற்றியதுடன், ஆங்கிலம் பேச முடியாத புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு ஆங்கிலம் கற்பித்து வந்துள்ளார்.
அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளம் மற்றும் நியாயமான வேலைகளுக்காகப் போராடிய அவர், சில்லறை மற்றும் துரித உணவுத் துறையில் உள்ள தொழிலாளர்களின் பிரதிநிதியாகவும் செயற்படுகிறார்.