இலங்கையின் அடுத்தகட்ட முயற்சி!!
இலங்கை கடன்களை மீள செலுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வரும் நிலையில், உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களான Lazard மற்றும் Clifford Chance ஆகிய நிறுவனங்களை இலங்கைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
கடந்த மாதம், இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை நிறுத்துவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
மேலும், கடந்த வாரம், வரலாற்றில் முதன்முறையாக, இலங்கை கடன் தவணையை செலுத்த தவறியிருந்தது.
இரண்டு நிறுவனங்களின் ஊடாக சுமார் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)