விலை அதிகரிப்பை தொடர்ந்து லங்கா ஐஓசி எடுத்துள்ள தீர்மானம்!!
இன்று (24) அதிகாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்ததை தொடர்ந்து வாகனங்களுக்கான எரிபொருள் விநியோக எல்லையை மாற்ற தீர்மானித்துள்ளது.
இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் 2,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது..
இதேவேளை, முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகம் 3,000 ரூபாவாக தொடர்ந்து இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், கார் , வேன் மற்றும் ஜீப் வாகனங்களுக்கான அதிகபட்ச எரிபொருள் விநியோகம் 10,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்பை தொடர்ந்து தனது எரிபொருள் விநியோக எல்லையை மேற்குறிப்பிட்டவாறு மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.