இலங்கையை கைவிட்டது உலக வங்கி !!
இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கான எந்தவித திட்டமும் இதுவரை வகுக்கப்படவில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை மக்கள் தொடர்பில் உலக வங்கியானது அக்கறையுடன் செயற்படுகின்றது.
உறுதியான பொருளாதாரக் கொள்கை ஒன்றை நிறைவேற்றும் வரையில் இலங்கைக்கு புதிய நிதி வசதிகள் எதனையும் வழங்காதிருக்க முடிவு செய்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மக்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் இதர அபிவிருத்திப் பங்காளர்களுடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமிருப்பதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அவசியமான மருந்துப் பொருட்கள், பின்தங்கிய வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, விவசாயிகள் மற்றும் சிறிய வியாபாரங்களுக்கு அவசியமான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது போன்றவற்றுக்கு அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க, ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்ட திட்டங்களை மீளத் தயார்ப்படுத்திய வண்ணமிருப்பதாகவும் உலக வங்கி அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
எனினும் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதில் உலக வங்கியானது சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மிக மோசமான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் : எச்சரிக்கிறார் விவசாயத்துறை அமைச்சர்!! (படங்கள்)
IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)