லைவ் அப்டேட்ஸ்: ரஷிய அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் – அதிபர் ஜெலன்ஸ்கி..!!
25.5.2022
05.30: உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ரஷியா முழுமையாக கைப்பற்றியது. 3 மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள், ரஷிய படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன.
இந்த நகரத்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
00.45: சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் இணைய வழியில் பங்கேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார். உக்ரைன் மக்களை ரஷிய படைகள் படுகொலை செய்து வருகின்றன. ரஷியாவின் மற்ற பிரதிநிதிகளுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை என்பதால் அவர்களுடனான பேச்சுவார்த்தையை ஏற்கப் போவதில்லை என தெரிவித்தார்.