சைக்கிள்களின் விலையும் அதிகரிப்பு!!
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பெரும்பாலானோர் தற்போது, தங்களது போக்குவரத்துக்காக, சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போதைய நிலையில், சைக்கிள் ஒன்றின் விலை 40,000 ரூபாவை அண்மித்துள்ளதுடன், அதற்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தற்போதேனும் துவிச்சக்கர வண்டி செலுத்துவதை ஊக்குவிக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என மவுண்டன் சைக்கிள் சங்கத்தின் தலைவர் அமல் சூரியகே தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி மற்றும் சைக்கிள் விலை அதிகரிப்பு என்பன காரணமாக, வீடுகளில் இருந்த பழைய சைக்கிள்களை புதுப்பித்து பயன்படுத்தவும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும், சந்தையில், சைக்கிள் உதிரிப்பாகங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சைக்கிள் பாகங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளர் ரிஸ்மி இஸ்மத் தெரிவித்துள்ளார்.
சைக்கிள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், சைக்கிள் இறக்குமதியின்போது அறவிடப்படும் வரியை, எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ள நிவாரண வரவு வெலவுத் திட்டத்தில் நீக்குமாறு சர்வதேச சைக்கிள் ஓட்ட சம்மேளனத்தின் நடுவரான என்.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”