;
Athirady Tamil News

ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தலும் , நூல் வெளியீடும்!!

0

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

நாவலர் கலாச்சார மண்டபம்,பிப3.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன்,தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

அந்நிகழ்வில் நடேசன் தொடர்பில் அவருடன் ஊடகப்பணியாற்றிய சக ஊடகவியலாளர்கள்,செயற்பாட்டாளர்களென பலரது நினைவுகூரலுடன் வெளிவந்துள்ள நூல் அறிமுகமும் வெளியீடும் நடைபெறவுள்ளது.

அதேவேளை “நடேசனின் ஊடகத்துறை பயணம்” தொடர்பிலான நினைவுரைகளுடன் ஞாபகார்த்த நினைவுப்பேரூரையினை யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன்,ஆற்றவுள்ளார்.

‘அரசியல் மற்றும் இதர நெருக்கடிகளை அரசியலமைப்பு தீர்வுகள் மூலமாக முகாமை செய்தல்’-இலங்கையில் அதற்கான சாத்தியங்களும் சவால்களும் எனும் தலைப்பில் அவரது உரை முன்னெடுக்கபடவுள்ளது.

நிகழ்வின் இறுதியாக ஊடகவியலாளர்களது தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ஆவணப்பட காட்சிப்படுத்தல் இடம்பெறவுள்ளது.

வுடமராட்சி கரவெட்டியில் பிறந்த மூத்த ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் 2005ம் ஆண்டின் மே 31ம் திகதி மட்டக்களப்பில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.