பணம் அச்சடிப்பது தொடர்பில் சஜித் கருத்து !!
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டிரில்லியன் கணக்கான ரூபா நாணய தாள்களை அச்சடிக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவிப்பதாகவும், இவ்வாறு நாணய தாள்களை அச்சடிப்பது பணம் படைத்த தனவந்தர்களுக்கு வரி சலுகை வழங்குவதற்கா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மக்கள் வங்கிக்கும், இலங்கை வங்கிக்கும் பணம் செலுத்த வேண்டிய பணம் படைத்த தனவந்தர்கள் பலர் நாட்டில் இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் பணத்தை அச்சிடப் போகின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு பணம் அச்சிடப்படும் போது வாழ்க்கைச் செலவு 40 சதவீதம் உயரும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி,ஆதரவற்ற மக்களே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் ஒன்றினைந்த முன்னணியின் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று (27) சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மிக மோசமான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் : எச்சரிக்கிறார் விவசாயத்துறை அமைச்சர்!! (படங்கள்)
IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)