எரிபொருள் செலவீனங்களை குறைக்க நடவடிக்கை !!
100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை எரிபொருளுக்காக மாதாந்தம் செலவிடப்படுவதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சராசரியாக அலகொன்றுக்கான உற்பத்தி செலவீனம் 48 ரூபா 2 சதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபை, நீர் மற்றும் அனல்மின் நிலைய கட்டமைப்புக்கள் மூலம் தமது செலவீனங்களை குறைக்க முடியும்.
இந்தநிலையில், தொழில்நுட்ப மற்றும் நிதி என்பனவற்றை மதீப்பிடு செய்வதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட புதுப்பிக்கதக்க திட்டங்களை துரிதப்படுத்த முடியும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.