அயோத்தி கோயிலில் 2024 ஜனவரிக்குள் ராமர் சிலை நிறுவப்படும்- வி.எச்.பி. தகவல்..!!
பாராளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கும் பணிகளில், இந்து அமைப்புகள் தீவிர காட்டி வருகின்றன.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும் என்று, விஸ்வ இந்து பரிசத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த விஎச்பி தலைவர் சரத் சர்மா கூறியுள்ளதாவது:
ஜூன் 1-ம் தேதி ராமர்கோயில் கருவறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப் படுகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருவறை சன்னதிக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
ஜூன் 1-ம் தேதியை கருவறையின் முதல் கல் அங்கு நாட்டப்படும். ராமர் சிலை நிறுவப்படும் புனிதமான பகுதி சிவப்பு கற்களால் அலங்கரிக்கப்படுகிறது.
உத்தர பிரதேச துணை முதல்வர், ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகளின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.அயோத்தி கோயிலில் 2024 ஜனவரிக்குள் ராமர் சிலை நிறுவப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சூரிய உதயத்தின் முதல் கதிர்கள் ராமர் சிலை மீது விழும் வகையில் கோயில் கட்டப்பட்டு வருவதாக ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.