மொட்டு உறுப்பினர்கள் சிலர் விசாரணைக்கு அழைப்பு!!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர், எதிர்வரும் புதன்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 9ஆம் திகதி “கோட்டா கோ கம” மற்றும் “மைனா கோ கம” என்பவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாமல் ராஜபக்ஸ, ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,ரமேஸ் பத்திரண உள்ளிட்டவர்களே இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாளைய தினம் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
வட்டரெக சிறைச்சாலை கைதிகளை, 9ஆம் திகதி நடந்த அரசியல் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்?
ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது: பொலிஸ்!! (படங்கள்)
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; பலர் படுகாயம் !!
http://www.athirady.com/tamil-news/news/1539479.htm