செப்டெம்பருக்குப் பின்னர் அரிசி தட்டுப்பாடு?
பெரும்போகத்துக்கான விவசாய நடவடிக்கைகள் தோல்வியடைந்தால் செப்டெம்பர் மாதம் முதல் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமென பேராசிரியர் அருண குமார எச்சரித்துள்ளார்.
நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள அரிசி செப்டெம்பர் மாதத்தின் ஆரம்பம் வரையிலேயே போதுமானதாக இருக்கும். எனவே பெரும்போக விவசாய நடவடிக்கைகள் வெற்றியளித்தால் செப்டெம்பருக்குப் பின்னர் தேவையான அரிசி கையிருப்பில் இருக்கும். எனினும் அது தோல்வியடைந்தால் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். நாட்டில் உள்ள டொலர் தட்டுப்பாடுப் பிரச்சினைகளால் அரிசிக்கும் நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.