உ.பி. மக்களவைத் தேர்தலில் பாஜக 75 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்- கட்சியினருக்கு யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல்..!!
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளதாவது:
உத்தர பிரதேசத்தில் முதன்முறையாக கடைசி வெள்ளிக்கிழமை தெருக்கள், சாலைகளில் நமாஸ் நடத்தப்படவில்லை. வழிபாட்டு தலங்கள், மசூதிகளில் அவர்கள் மத நிகழ்ச்சிகளை நடத்த முடியும். ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி அமைதியாக நடைபெற்றது.
மாநிலத்தில் எந்த மதக் கலவரமும் நடைபெறவில்லை. மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகள் எப்படி அகற்றப்பட்டது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
மக்களின் உதவியாலும், எங்களின் கடின உழைப்பாலும், சட்டசபைத் தேர்தலில் சிறந்த முடிவுகளைப் பெற்றோம். 2024 லோக்சபா தேர்தலுக்கு இப்போது இருந்தே களத்தை தயார் செய்ய வேண்டும்.
பிரதமர் மோடியின் தலைமையில், உத்தரப் பிரதேசத்தில் 75 இடங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.