’21குறித்து இன்னும் இறுதி முடிவு இல்லை’ !!
அரசாங்கம் முன்வைத்துள்ள 21ஆவது திருத்தம் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.