சைக்கிள் விலை 100 சதவீதம் உயர்வு !!
டொலர் பிரச்சினையால் சைக்கிள் ஒன்றின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி பெண்கள் பயன்படுத்தும் மவுண்டன் பைக் மற்றும் சைக்கிளின் விலை 18,000 ரூபாயிலிருந்து 36,000 வரை உயர்ந்துள்ளது.
சைக்கிள்களின் பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையிலேயே பொருத்தப்படுகின்றன.
எனினம், சைக்கிள் உதிரிபாகங்களுக்கான வரியை சொகுசுப் பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கி, பூஜ்ஜியமாகக் குறைத்தால் ஒரு மிதிவண்டி சுமார் ரூ.19,000-க்கு நிச்சயம் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
விலைகள் அதிகரித்த போதிலும், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் விலையேற்றம் காரணமாக பலர் வீடுகளில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள துவிச்சக்கர வண்டிகளை பழுது நீக்கி பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.