அச்சுவேலி வல்லைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!! (வீடியோ, படங்கள்)
அச்சுவேலி வல்லைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன் வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
டிப்பர் வாகனம் ஒன்றும் பெக்கோ வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போதே வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”