ஊறணி புனித அந்தோணியார் ஆலயம்!! (படங்கள்)
யுத்தத்தின் போது இடித்தழிக்கப்பட்ட ஊறணி புனித அந்தோணியார் ஆலயம் மீண்டும் 30 வருடங்களின் பின் நேற்றைய தினம்(30.05.2022) புதிதாக திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்துகொண்டு ஆலயத்தினை ஆசீர்வதித்து திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
கடந்த 30 வருட யுத்தம் காரணமாக ஊரணி புனித அந்தோணியார் ஆலயம் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது
பின்னர் 2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு மீண்டும் புதிதாக ஆலய பங்கு மக்களின் உதவியுடன் கட்டப்பட்டது. நிறைவுபெற்ற ஆலயம் திருவிழா தினமாகிய நேற்று திருப்பலியுடன் மக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. 30 வருடங்களில் முன்னர் ஆலயத்தின் பங்கு தந்தையாக விளங்கிய தேவராயன் அடிகளார் மீண்டும் ஆலயத்தினை பொறுப்பெடுத்து ள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”