மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை !!
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் அத்தனகல ஓயா, களனி கங்கை, களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நிலாவல கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது என்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.