நாட்டின் பணவீக்கம் மீண்டும் அதிகரித்தது !!
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மூலம் அளவிடப்பட்ட மே மாதத்துக்கான முதன்மைப் பணவீக்கம் 39.1 சதவீதமாக அதிகரித்துள்ளது என, இலங்கை மத்திய வங்கி, இன்று (31) அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 29.8 சதவீதமாக இருந்த பணவீக்கம் மேயில் 39.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஏப்ரலில் 46.6 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் மே மாதத்தில் 57.4 சதவீதமாக அதிகரித்துள்ள அதேவேளை, உணவில்லாப் பணவீக்கம் 22 சதவீதத்திலிருந்து 30.6 சதவீதமாக அதிகரித்துள்ளது என, மத்தியவங்கி குறிப்பிட்டுள்ளது.