21 ஆவது திருத்தத்தை எதிர்க்கவில்லை: சஜித் பிரேமதாஸ !!
ஐக்கிய மக்கள் சக்தியினர் 21 ஆவது அரசயலமைப்புத் திருத்தத்தை எதிர்ப்பதாக வெளியாகும் செய்தி, உண்மைக்குப் புறம்பானது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
21 ஆவது திருத்தத்தை ஐக்கிய மக்கள் சக்தியினரே நாட்டுக்கும் பாராளுமன்றத்திற்கும் முதலில் முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பின்னிணியில், தாம் ஏன் அதனை எதிர்க்க வேண்டும் என சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும், அதற்கான யோசனைகளை முன்வைப்பதற்கும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியே முன்னின்று செயற்பட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், சமநிலை மற்றும் தேசிய பாதுகாப்புச் சபையை ஸ்தாபித்தல் போன்ற யோசனைகளை தாம் முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.