;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டமையின் 41வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 41வது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில்
இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா அவர்களுக்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தலின்போது யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ்ப்பாணப் பொதுசன நூலக பிரதம நூலகர், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், வாசகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண பொதுநூலகம் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி வன்முறைக் குழுவொன்றினால் தீயூட்டப்பட்டது.நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.