அயோத்தி, மதுரா கோவில்களுக்கு அருகே மது விற்பனைக்கு தடை – யோகி ஆதித்யநாத்..!!
உத்தரபிரதேசத்தில் அயோத்தி, மதுரா கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலின் கருவறைக்கு அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:
அயோத்தி ராமர் கோவில் மற்றும் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியை சுற்றி உள்ள பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளின் உரிமங்களும் ரத்து செய்யப்படுகின்றன.
அதேபோல மதுரா கோவிலை சுற்றி செயல்பட்டு வந்த 37 மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு பாலை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற மதுராவில் தொழில்துறையை புதுப்பிக்கும் வகையில் வணிகா்கள் பால் தொழிலை செய்யலாம்.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.