சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கச்சதீவினை மீட்க கோருகின்றனர் – என்.வி. சுப்ரமணியன்!!
நாம் விழுந்து கிடக்கின்ற நிலையில் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல உரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கச்சதீவினை மீட்டு தருமாறு தமிழக முதலவர் ஸ்டாலின் நரேந்திர மோடியிடம் கேட்டுள்ளார் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் முன்னாள் தலைவர் என்.வி. சுப்ரமணியன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் சமகால விடயங்கள் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் எல்லா நாடுகளிடமும் கையேந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது.
இந்தியாவிடம் கையேந்த வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளது.
இதற்கமைய தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய நேரத்தில் நிவாரண பொதிகளை அனுப்பி நாட்டிற்கு மிகப்பெரிய உதவினை செய்து மீட்டு இருக்கிறார். இந்த விடயத்திற்கு நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலங்கை – இந்திய சட்ட விரோதமான இழுவைப் படகு தொடர்பான பிரச்சனைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளது.
எனவே இதனை தீர்த்து தருமாறு இலங்கையின் வட, கிழக்கு மீனவர்கள் தமிழக பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தோம் .
இதற்கமைய நாம் விழுந்து கிடக்கின்ற இந்த நிலையில் ”பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது” போல உரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கச்சதீவினை மீட்டு தருமாறு தமிழக முதலவர் ஸ்டார்லின் நரேந்திர மோடியிடம் கேட்டுள்ளார்.
கச்சதீவினை மீள பெறுவதனாலோ இழுவை மடி தொழிலுக்கு பரிகாரமாக அமையாது .இழுவை மடி தொழிலுக்கும்,கச்சத்தீவுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இதற்கு மாறாக எங்கள் எல்லையினை தாண்டி கெடுதல் செய்வதற்கு வழிவகைக்கும் நோக்கிலே கச்சதீவினை மீட்டு தருமாறு ஸ்டாலின் கேட்டு இருக்கிறார்.இந்த விடயமானது ஒரு நாடு சார்ந்த நாட்டு மக்கள் சார்ந்த தன்னியச்சையான, வட பகுதியில் வாழுகின்ற தமிழ் மக்களை புறம் தள்ளுகின்ற கருத்தினை வைத்திருப்பது என்பது எங்களுக்கு ஏமாற்றத்தினையும் வியப்பினையும் தந்திருக்கிறது.
இந்திரகாந்தி – ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் நடைபெற்ற பேசசுவார்த்தையின் அடிப்படையில் கச்சத்தீவு வழங்கப்பட்டிருந்தது . இலங்கை நாட்டின் இன்னும் பல பிரதேசங்களை கையகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயற்பாடுகளை செய்கிறார்களா ? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
எனவே தமிழக முதலமைச்சர் இழுவைமடி தொழிலுக்கான முயற்சியாக கச்சத்தீவு விவாதத்தினை கைவிட்டு எங்களுக்கு இருக்கின்ற இழுவைமடி தொழில் பிரச்சனைகளை நிறுத்துவதற்குரிய முயற்சியினை எடுப்பது வரவேற்கத்தக்கது.
இலங்கையின் அனலைதீவு,நெடுந்தீவு,நயினாதீவு போன்ற 3 தீவுகள் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்காக இந்தியாவிடம் கையளிக்கப்பட்டு இருக்கின்றன.அத்தீவுகளிலே நிவாரணப்பொருளான மண்ணெண்ணையினை கொடுத்து கவர்ச்சியை ஏற்படுத்தி வசமாக்கின்ற வேலையினையும் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”