தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி முடிவெடுக்க முடியாது !!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில், பிரதமர் அலுவலகத்தில் சர்வ கட்சித் தலைவர்களுடன் 21வது சட்டம் அமுலாக்கம் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இக்கலந்துரையாடலில் நீதி அமைச்சரிடம் அரசியல் கட்சிகளினால் பல்வேறு கோரிக்கைகள் முன்மொழியப்பட்டது.
இதன் போது இ.தொ. கா சார்பில் அதன் தலைவர் செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் பிரதமரை நியமிப்பது தொடர்பாகவும் நீக்குவது தொடர்பாகவும் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி முடிவெடுக்க முடியாது என்றும், பாராளுமன்ற அனுமதியுடனே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கருத்து முன்வைத்தார்.
அதற்கு நீதி அமைச்சர் சாதகமாக பதிலளித்ததுடன், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் 21வது சட்டம் அமுலாக்கம் சமர்பிக்கப்படும் என பதிலளித்தார்.