ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை !!

கொழும்பின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று உள்நுழைவதற்கு ஆர்ப்பாட்டகாரர்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் படி யோர்க் வீதி , பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட்ட வீதிகளுக்கு உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுளது.
கோட்டைப் பொலிஸ் பிரிவில் பொது அல்லது வாகனப் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு – கோட்டை பகுதியில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.