உத்தரபிரதேசத்தில் குரங்கு அம்மை அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதி..!!
கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ஆப்பிரிக்காவில் முதன் முதலில் தோன்றிய இந்த நோய் தற்போது ஜெர்மனி.இங்கிலாந்து,ஸ்பெயின்.போர்ச்சுகல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது
இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 5 வயது சிறுமி க்கு திடீரென உடல்நிலை பாதிக்கபட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த சிறுமிக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்த அந்த சிறுமியின் ரத்த மாதிரிகள் எடுக்கப்படடு பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளதாக மருத்துவ அதிகாரி தெரிவித்தார். பரிசோதனை முடிவில் தான் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும். தற்போது அந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.