சென்னையில் இன்று கவர்னர் மாளிகை நோக்கி எஸ்.டி.பி.ஐ. பேரணி..!!
பேரணியில் பங்கேற்றவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கு போடப்பட்டிருந்த மேடையில் ஏறி கட்சி தலைவர்கள் பேசினார்கள். சென்னை: மாநில சுயாட்சி எதிர்ப்பு, சிறுபான்மை விரோத போக்கு, 7 தமிழர் விடுதலை உள்ளிட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்தது ஆகியவற்றுக்காக தமிழக கவர்னரை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கிண்டி ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் இன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர ஆயிரக்கணக்கில் திரண்டனர். பின்னர் அவர்கள் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். இந்த பேரணிக்கு எஸ்..பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கடச்யின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில நிர்வாகிகள் அப்துல் அமீது, உமர்பாரூக், அகமது நவ்வி, ரத்தினம், ஏ.கே.கரீம், அமீர்அம்சா, ராஜா முகமது, பசீர் சுல்தான், கமால்பாஷா, முகமது ரசீத், மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கு போடப்பட்டிருந்த மேடையில் ஏறி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.