;
Athirady Tamil News

நாங்கள் காக்கா கூட்டமா? அதிமுக-பாஜக இடையே மீண்டும் வெடித்தது கருத்து மோதல்..!!

0

பாஜக ஒற்றுமை கூட்டம் என்றும் மாற்றத்தை தரக்கூடிய சக்திபடைத்த கூட்டம் என்றும் கரு.நாகராஜன் கூறினார். சென்னை: முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம் என்று விமர்சித்தார். “பாரதிய ஜனதாவின் சில கூட்டங்களில் அதிகம் பேர் வருகிறார்கள். அதற்காக பிரதான எதிர்க்கட்சி ஆகிவிட முடியாது. இறை எங்கே இருக்கிறதோ அங்கே அதிகமாக காக்கா கூடும். பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம். காலை நாகூரில் அதிகளவில் புறாக்கள் இருக்கும்.சிறிது நேரத்தில் அந்தப் புறாக்கள் அனைத்தும் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும். ஆனால் அ.தி.மு.க.வுக்கு கூடுவது கொள்கை கூட்டம்” என்றார் செல்லூர் ராஜூ. “எல்லா கட்சிகளும் தனித்தே போட்டியிடுவோம். எல்லா கட்சியும் தயார் என்றால் அதிமுக தயார். 2016ல் அதை நிறைவேற்றியிருக்கிறோம். 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் வந்திருக்கிறோம். யாருடனும் கூட்டணி கிடையாது. அதேபோல் எங்கள் தலைவர்கள் எடப்பாடியாரும், ஓபிஎஸ்-ம் சொல்ல தயாராக இருக்கிறார்கள். நாளைக்கே தேர்தலை வைக்க தயாரா? மக்கள் யார் பக்கம் என்பதை பார்த்துவிடுவோம். இதை அதிமுக வாய்சாகவே எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்றும் செல்லூர் ராஜூ கூறினார். செல்லூர் ராஜூவின் இந்த கருத்து குறித்து பாஜக துணை தலைவா கரு. நாகராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:- காக்காவின் மகத்துவம் அவருக்கு (செல்லூர் ரலாஜூ) புரியாது. நமது முதாதையர்கள் எல்லாம் காக்காவாக இருப்பதால்தான் எல்லா சாமியையும் கும்பிடும்போது காக்காவுக்கு முதலில் சாப்பாடு வைத்துவிட்டு சாப்பிடும் ஊரில் நாம் இருக்கிறோம். காக்காவை மட்டமாக பேசக்கூடாது. பல கட்சிக்கு போய் வந்துகொண்டிருக்கும் காக்கா கூட்டம் பாஜகவில் இல்லை. காக்கா கூட்டத்தை பாருங்க, ஒண்ணா இருக்க கத்துங்கங்க… என்று பாட்டு உள்ளது. அதை செல்லூர் ராஜூ மறந்துவிட்டார். நாங்கள் விரட்டிவிட்டதும் ஓடும் காக்கா கூட்டம் அல்ல. பாஜக ஒற்றுமை கூட்டம். மாற்றத்தை தரக்கூடிய சக்திபடைத்த கூட்டம். எளிதாக அவர் இதை கடந்துபோக முடியாது. தனித்து போட்டியிடுவது குறித்து அவர் கூறுகிறார். நாங்கள் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். தனித்து போட்டியிட பாஜகவுக்கு சக்தியில்லாமல் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளில் 488 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். சென்னை மாநகராட்சியில் 17 இடங்களில் பாஜக இரண்டாம் இடம் பிடித்தது. அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றது. பாஜகவை தனித்து போட்டியிட விட்டது தவறு என அதிமுக நிர்வாகிகளே வருத்தப்பட்டனர். செல்லூர் ராஜூ இப்படி பேசக்கூடாது. இவ்வாறு கரு. நாகராஜன் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.