யாழில் முருங்கைக்காய் திருடர்கள் சைக்கிளை இழந்த பரிதாபம்!!!!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் திருட்டுச் சம்பவங்களும் சில இடங்களில் அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் யாழ் வடமராட்சி உடுப்பிட்டி இமையாணன் கிழக்கு செம்பாட்டு ஒழுங்கை பகுதியில் உள்ள முருங்கை தோட்டத்தில் நேற்று இரவு முருங்கைக்காய் திருடும் முயற்சியில் திருடர்கள் ஈடுபட்டனர்.
அதேவேளை தோட்ட உரிமையாளர் தோட்டத்தை கண்காணிக்க வந்த போது திருடர்களை அவதானித்தார்.
இந்நிலையில் அவரை கண்ட திருடர்கள் தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் திருடர்கள் வந்த இரண்டு சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”