டீசல் விநியோகத்தில் மீண்டும் சிக்கல் !!
நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு இருப்பதாகவும் இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ள டீசல் கையிருப்பை அடுத்த டீசல் தொகுதி வரும் வரை முகாமைத்தும் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் தற்போது தற்போது 40,000 மெற்றிக் தொன் டீசல் கையிருப்பு இருப்பதாகவும் நாளாந்த டீசல் விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன்னாக குறைந்துள்ளது என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜூன் 9 அல்லது 10 ஆம் திகதிக்கான டீசல் வழங்குவதை விநியோகஸ்தர்கள் இன்னும் உறுதிப்படுத்தாததால், டீசல் ஏற்றுமதி நிச்சயமற்றது என்று அறியமுடிகிறது.
எனினும், இந்திய கடன் வரியின் கீழ் அடுத்த டீசல் தொகுதி ஜூன் 16 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.
இந்நிலையிலேயே பெற்றொலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ள டீசல் கையிருப்பை அடுத்த டீசல் தொகுதி வரும் வரை முகாமைத்தும் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும், பெற்றொலி விநியோகம் வழமை போல இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.