அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு!!
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (06) நடைபெறவுள்ளது.
ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலின் சான்றிதழ், அரசியல் கட்சிகளின் அரசியலமைப்பு ஆவணங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து இந்த கலந்துரையாடல் நடைபெறும்.
இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.