சமையல் எரிவாயு அத்தியாவசியமற்ற பொருள் !!
சமையல் எரிவாயு அத்தியாவசிய பொருள் என்ற வர்த்தமானியிலிருந்து ஒரு வருடத்துக்கு முன்னர் நீக்கப்பட்டதால், அவர்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையால் தலையிட முடியாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
எனினும் எதன் அடிப்படையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு, நுகர்வார் விவகார அதிகார சபை தனக்கு ஆலோசனை வழங்கியுள்ளதென வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எனவே அவர்களின் விலை அதிகரிப்பு தொடர்பான விடயத்தில் நுகர்வோர் அதிகார சபை நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது.ஆனால் எதன் அடிப்படையல் விலை அதிகரிக்கப்பட்டது என எம்மால் விசாரணை முன்னெடுக்க முடியும் என்றார்.