அரிசி, சீனி, கருவாட்டை மீனுக்காக இழந்த தாய் !!
கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் தாயொருவர், வீட்டின் அன்றாட தேவைக்காக கொள்வனவுச் செய்த ஒரு கிலோகிராம் அரிசி, 250 கிராம் சீனி மற்றும் 200 கிராம் கருவாட்டை பறிகொடுத்த சம்பவமொன்று கதிர்காமத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்தப் பொதியில் பிள்ளைகளுக்காக கொள்வனவுச் செய்த பிஸ்கட் பக்கற் ஒன்றும் இருந்ததாக, பொருட்களை இழந்த மூன்று பிள்ளைகளின் தாய் தெரிவித்துள்ளார்.
கதிர்காமம் நகரத்தில் பொருட்களைக் கொள்வனவுச் செய்துகொண்டு வந்துகொண்டிருந்த அந்தத் தாய், சைக்கிளில் மீன் விற்பனைச் செய்பவரை கண்டு, சைக்கிளை நிறுத்தியுள்ளார். அதன்பின்னர், தன்னுடைய கையிலிருந்த பொதியை ஓரத்தில் வைத்துவிட்டு, மீன்களை விலைகளைக் கேட்டுள்ளார்.
கொள்வனவுச் செய்த மீனை, உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியில் வைப்பதற்கு பொதியை பார்த்தபோது, பொதி மாயமாகியிருந்தமை கண்டுள்ளார். எனினும், உணவுப்பொருட்கள் அடங்கிய பொதி கிடைக்கவில்லை.
கடுமையான கஸ்டங்களுக்கு மத்தியில் பிஸ்கட் பக்கட்டுடன் கூடிய உணவுப்பொதி இழந்து, மீனுடன் மட்டுமே வீட்டுக்குத் திரும்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டதாக அந்தத் தாய், வேதனையுடன் தெரிவித்துக்கொண்டுள்ளார்.